செவ்வாய், 30 ஜூன், 2020

ராட்சசி திரைப்படம் ஒரு சிறந்த பள்ளிக்கூடம் - திரைப்பட விமர்சனம்

"பெற்றோர், ஆசிரியர், மாணாக்கர், கனவான்கள் மற்றும் அரச அதிகாரிகட்கு அவசியமான பாடம் புகட்டும் பள்ளிக்கூடம்தான் இந்த ராட்சசி திரைப்படம்

அறிமுகம்
ராட்சசியில் ஜோதிகா

விமர்சனம் என்று வருகின்றபோது எந்த விடயத்தைப்பற்றி விமர்சிக்கிறோமோ அதைப்பற்றி நேரான பார்வையில் அந்த விமர்சனத்தை முன்வைக்கின்றபோதுதான் எதிர்காலத்தில் நாம் எதிர்பார்கின்ற மாற்றங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றங்களையாவது விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்ட விடயங்களில் காணக்கூடியதாக இருக்கும் என்பது எனது ஆளமான நம்பிக்கை. அத்தோடு விமர்சனங்கள் ஒரு படைப்பாளியை

வியாழன், 25 ஜூன், 2020

தலையிழந்தும் கம்பீரமாக.......



நீண்ட
இடைவெளியின் பின்
முதல் பயணம்
இயற்கை ரசனைக்குள்
கண்களில் சிக்குண்ட
அந்தக் காட்சி
தலை சாய்ந்த
மொட்டை மரங்களாய்

செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்ட நாயகர்கள் 2

கணபதி ஐயர்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் “கணபதி ஐயர்” நீங்காத இடம் பிடித்த ஒரு கவிராயரும் நாடக எழுத்தாளரும் ஆவார். இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இவருடை பங்களிப்பு மிகப்பெரியதாகும். இவர் பற்றி 19ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் அதிகம் பேசப்பட்டுள்ளதாயினும் பின்னைய காலங்களில் அநேகமானவர்களுக்கு ஞாபகத்தில் வராத ஒரு மனிதராக இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. தற்கால எழுத்தாளர்களும் அறிஞர்களும் கணபதி ஐயர் பற்றி அதிகம் நினைவு படுத்தாமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமன்றி இவரைப்பற்றி ஒரு சிலர் மட்டுமே பதிவுகளை மேற்கொண்டுள்ளமையும் மற்றொரு காரணமாக இருக்கலாம். மற்றும் இவர் பற்றிய விரிவான வரலாறுகள் போதுமான தகவல்களோடு காணப்படாமையும் அந்தக்காலத்தில் வரலாற்றுத் தேவையின் பொருட்டான தகவல்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு தகவல்கள் சரியாக சேகரித்து பாதுகாக்கப்படாமையும் இலங்கையில் இவரைப்பற்றிய அதிக தகவல்களுடனான படைப்புக்கள் வெளிவராமைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும் இவரைப்பற்றி இலங்கையில் சில பிரபலமான

திங்கள், 22 ஜூன், 2020

தமிழ் சுகமான ரசனை

வைகறைப் பொழுதுகளில்
குளிர் சூரியக்
கதிர்களின் தழுவல்களாக
என் மனவானில்
சிறகடித்து நினைவுகளாய்
உலா வந்த பூபாளங்களை

தமிழ் இருப்பிற்காய் இமான் தந்த கௌரவம்

உலகத்த தமிழர் அறிந்திருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு சம்பவம்

இசையமைப்பாளர் டி. இமான்

அண்மையில் ஒரு சம்பவகம்பற்றிய கற்கையின்போதுதான் இந்த சம்பவத்தை நான் அறிந்திருந்தேன். இதை உங்களுக்கு தெரியுமா என்ற தலைப்பில் பிரசுரிக்கலாமா என்று நினைத்தேன் பின்னர் வேண்டாம் தலைப்பை சற்று மாற்றி வித்தியாசமாக தருவோம் என முடிவெடுத்து மேற்காட்டியபடி தலைப்பிட்டேன். 

திரு. டி. இமான் அவர்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இது என்ன கேள்வி அவரை அறியாதவர்களுமுண்டா. தயவு செய்து நடிகர் மற்றும் தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி பற்றிதான் கேட்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.

ஞாயிறு, 21 ஜூன், 2020

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு


இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க பத்திரிகை

சத்திய வேத பாதுகாவலன் (“The Catholic Guardian”) என்பது இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்ட கத்தோலிக்க சமயத்தின் பரப்புரைக்கான பத்திரிகையாகும். இது 1876ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க பத்திரிகை ஆகும். ஆரம்பத்தில் சத்திய வேத பாதுகாவலன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுவந்த இந்தப்பத்திரிகை பின்னர் பாதுகாவலன் என்னும் பெயரில் பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது. இந்த பத்திரிகையானது ஆரம்பத்தில் இரண்டு 

வெள்ளி, 19 ஜூன், 2020

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்ட நாயகர்கள் 1


நினைவிலிருந்து மறையப்பார்க்கும் தமிழ் வளர்த்த முன்னோர்கள்

அறிமுகம்

இலங்கையில் முன்னைய காலப்பகுதியில் தமிழ் வழர்த்த பெரியோர் பலர் இருந்துள்ளனர் என்பது வரலாறு. இவர்கள் பற்றிய வெளியீடுகள் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெவ்வேறு எழுத்தாளர்களினால் வெவ்வேறு காலப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. சில எழுத்தாளர்கள் தமிழ் வழர்த்த பெரியோர்கள் பலரை பற்றிய விடயங்களை கட்டுரைகளாக ஒரே நூலில் தொகுத்து வெளியிட்டுள்மை பல்வேறு பதிவுகள் மூலம் அறியக்கூடியதாகவும் இருக்கிறது. சில நூல்கள் இன்னமும் நூல் நிலையங்களிலும், புத்தகசாலைகளிலும் இணையத்தளங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடிகிறது. தமிழ் வளாச்சிக்காக பங்களிப்புச்செய்த இந்த பெரியோர்கள் சிலர் இன்றும் மிகுந்த பிரபலம் மிக்கவர்களாக அனேகமானவர்களால் பேசப்படுபவர்களாகவும் குறித்துரைக்கப் படுபவர்களாகவும் உள்ளனர். அத்தோடு இவர்களில் சிலர் சில எழுத்தாளர்கள் மேற்கொள்கின்ற ஆய்வுகளுக்குள் உட்படுத்தப்படுகின்றவர்களாகவும் உள்ளனர். சில பெரியோர்கள் பற்றி தற்காலத்தில் அறியக்கிடைக்கின்றபோது இப்படி ஒருவர் இருந்திருக்கின்றாரா இவர் தழிழுகிற்கு தமிழ் வளர்ச்சியின்பொருட்டு இத்துணை பங்களிப்பு செய்திருக்கின்றாரா இவரைப்பற்றி இதற்குமுன்னர் நாம் அறிந்திருக்கவில்லையே என்றெல்லாம் எண்ணத்தோன்றும் நிலையும் இருக்கிறது.

வியாழன், 18 ஜூன், 2020

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு

இலங்கை அரசாங்க சபையின் முதல் தமிழ் சபாநாயகர்


சேர். வை. துரைசுவாமி
இலங்கை அரசாங்க சபையின் முதலாவது தமிழ் சபாநாயகராக இருந்தவர் சேர்வைத்திலிங்கம் துரைசாமி அவர்கள்.1936  முதல் 1947வரை சபாநாயகராகவும் இலங்கையின் முதல் பிரசையாகவும் விளங்கினார். 1920 முதல் 1940 வரையான காலப்பகுதியில் இலங்கையின் அரசியலிலும் இவர் முன்னணி வகித்தவராக காணப்பட்டார்.
இவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை  எனும் ஊரின் மைந்தன்ஆனி மாதம் 8ஆம் திகதி 1874ஆம் ஆண்டு தமிழ் சைவ மரபில் சிறந்த தனிநாயக முதலி யார் குடியில் அவதரித்தார்தந்தை ஐயம்பிள்ளை வைத்திலிங்கம்இவருக்கு சகோதரர்கள் ஐந்துபேர் பொன்னுத்துரைபொன்னம்மாவிஜயரத்னம்இரத்தினகோபால் மற்றும் ராஜகோபால் ஆகியோரே அவர்கள்

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு

சிலோன் தியேட்டர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தை ஆரம்பித்தவர்

சேர்சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினல்

சேர். சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினல் இவர் இலங்கையில் திரைப்படத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர்தான்  “சிலோன் தியேட்டர்ஸ் லிமிட்டட்” எனும் நிறுவனத்தை 1928 செப்டெம்பர் 29இல் ஆரம்பித்தவர். இந்த நிறுவனம் தற்போதும் இலங்கையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.

இலங்கையின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது தமிழ் பத்திரிகை

முன்பு ஒரு காலத்தில் பத்திரிகைகள் என்று ஏதும் இருந்ததில்லை. எல்லா தகவல்களுமே அநேகமாக வாய் வழியாகவே பரவி வந்தன என்பது யாவரும் அறிந்ததே. கட்டுரைகள், கவிதைகள், கதைகள், வரலாறுகள் மற்றும் தகவல் பதிவுகள் போன்றவை வாய்வழியாகவும், கல்வெட்டுக்களாகவும் செதுக்கப் பட்டிருந்தன அன்றேல் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியினால் செதுக்கப்பட்டிருந்தன. இவையே அக்காலத்தில் வழக்கத்திலிருந்த எழுத்தூடகங்களாக இருந்தமை நான் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. இவை கூட பெருமளவில் இல்லாது குறிப்பிடக் கூடிய சில பிரமுகர்களால் மிகச்சொற்ப அழவிலேயே அந்த நாட்களில் உருவாக்கப்பட்டன என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு உருவாக்கப் பட்டவை அனைத்தும் அனேகமாக ஒரேயொரு பிரதியாக மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன. இந்த காரணத்தால் பல்வேறு வகையான வரலாற்று முக்கியத்துவவம் வாய்ந்த பல தகவல்கள் மற்றும் வரலாறுகள் இன்றும் கிடைத்தற்கரியனவாக காணப்படுகின்றன.

திங்கள், 15 ஜூன், 2020

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு

மின் அஞ்சல் ( மெயில்) முகவரி முறைமையை கண்டு பிடித்தவர்:

விசிவா ஐயாத்துரை

வெள்ளையப்பா ஐயாத்துரை மற்றும் மீனாட்சி ஐயாத்துரை ஆகியோருக்கு 1963ஆம் டிசம்பர் (மார்கழி) மாதம் 2ஆம் திகதி மும்பை இந்தியாயாவில் அவதரித்தவர் வி. . சிவா ஐயாத்துரை அவர்கள். இவர் 1978இல் தனது 14வது வயதின்போது மருத்துவ பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளின்பொருட்டு மின் அஞ்சல் ( மெயில்) முறைமையை பயன்படுத்தத் தொடங்கினார்

சனி, 13 ஜூன், 2020

தேடலில் கிடைத்த முத்து ஒன்று அப்பாத்துரை முத்துலிங்கம் - எழுத்தாளர்


அறிமுகம்



ஆழமான நீர் தடாகத்துக்கடியிலே உறுதியாக வேர் பதித்து சலனமின்றி நீரின் அசைவுகளோடு இலைகளால் நீச்சலடித்து மிதந்து பூஜை பீடத்திற்கு வைப்பதற்கென்றே பூத்த அந்த மலரைபோல உலகு பார்க்க மலர்ந்து தேவையுள்ள அனைவருமே தேடி ரசிக்கும்படியாக வாழ்ந்து தன் தாய்மொழிக்கு தரவேண்டிய கௌரவத்தை பல்வகைப்பட்ட வடிவங்களில் தன் எழுத்துக்களால் இன்றுவரை தூரத்து தேசத்திலிருந்து தந்துகொண்டிருக்கும் ஓர் சிறந்த எழுத்தாளர் பற்றியதே இந்த கட்டுரை.

யார் அந்த தூரத்து எழுத்தாளர்? அவர்தான் பல்வேறு நாடுகளிலும் தற்போது பலராலும் விரும்பப்படும், ரசிக்கப்படும், கௌரவிக்கப்படும் மற்றும் தேடப்படும் பல்வேறுபட்ட பல்சுவை எழுத்துக் கலைப் படைப்புக்களுக்கு சொந்தக்கார னாகிய திரு. அப்பாத்துரை முத்துலிங்கம் அவர்கள். 1980களில் இவரது வெளியீடாகிய அக்கா சிறுகதைத் தொகுப்பு படைப்பில் வெளியிட்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தததுண்டு. பின்னர் இவரது வெளியீடுகள் பற்றி அறியக்கிடைக்காததால் இவர் படைப்புகள் பற்றிய நினைவு மெல்ல மெல்ல மறந்து போயிற்று. அண்மையில் தமிழகத்தின் பிரபல மேடைப் பேச்சாளரும் பட்டிமன்ற விற்பன்னருமான மிகப் பிரபலமான திருமதி பாரதி பாஸ்கரன் அவர்களுடைய கண்ணதாசன் நிகழ்வுகளை மீட்டும் பாட்டுமன்றம் சார் பேச்சு நிகழ்வு ஒளிப்படம் ஒன்றை யூரியூப் (YouTube) இணையதள பகுதியில் பார்க்கக் கிடைத்தது. அதிலே தற்போது பிரபலமாக இருக்கக்கூடிய 5 எழுத்தாளர்களில் ஒருவராக திரு. . முத்துலிங்கம் என்ற கனடாவில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் பார்க்கப்படுகிறார் என்ற கருத்தை பாரதி பாஸ்கர் அவர்கள் முன்வைத்திருந்தார். இந்த தகவலே என்னை எழுத்தாளர் முத்துலிங்கம் பற்றிய நினைவுக்குள் மீண்டும் கொண்டுசென்றதோடு அவர் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் தேடவும் தூண்டியதோடு நின்றுவிடாமல் அவர்பற்றிய இந்த கட்டுரையையும் எழுதத் தூண்டியது என்று சொன்னாhல் அது மிகையாகாது. இவர் பற்றிய விடயங்கள் பலவற்றையும் இந்த கட்டுரையில் ஒரே பார்வையில் தரவேண்டும் என்ற ஆர்வத்தால் சற்று விரிவாகவே இந்த கட்டுரையை எழுத முயற்சித்திருக்கிறேன்.

புதன், 10 ஜூன், 2020

இந்த ஆட்டத்தை நிறுத்து………!

















அசுரனாய் வந்து
ஆடினாய் எங்கும் நீ
கோரத் தாண்டவம்
கண்டங்கள் தாண்டி
வியாபித்தே காட்டினாய்
உன் ருத்ர தாண்டவத்தை
நெஞ்சிலே பயங் கொண்டு
ஒதுங்கினர் உலகோர்
வீட்டுக் கைதிகளாய்
தம் வாசஸ் தலங்களுக்குள்
அத்தனை மாந்தரும்
அரசாணை கூட
அதைத்தான் வேண்டிற்று
இயந்திரம் போலே
அவசர அவசரமாய்
ஓடிக் கொண்டிருந்த
மனித வாழ்க்கை
ஓய்வு கண்டது
ஒரு கணம் அல்ல
மாதங்கள் மூன்றையும்
கடந்து தாண்டி

சனி, 6 ஜூன், 2020

தோப்போரம் இளைப்பாறலாம்

தொலை வானில்

பட்சியொன்று

சிறகடித்ததை

கண்ணுற்ற

உன் விழிகள்

இணையானது

துணையானது!

சஞ்சரிக்கிறேன் நான்

உன் சிறகுகளுடன்

நீண்ட நெடு வானில்.....!

வெள்ளி, 5 ஜூன், 2020

பெரும் தலை – பிக்போஸ் – (Bigg Boss)


பருவம் மூன்று (Season 3)
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
பிக்போஸ் தமிழ் 3 பங்குபற்றுனர்

இப்போது நாங்கள் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பருவத்திற்கு செல்வோம். கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி பெரும் தலை (Bigg Boss) பருவம் 3 நிகழ்வு கோலாகலமாக பிரமாண்டமான மண்டபத்தில் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்க ஆரம்பமாகியது. பங்கு பற்றுனர் அறிமுகமும் விசேட கலைநிகழ்வுகளும் இதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டு இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் இந்த பருவத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பங்குபற்றுனர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

பெரும் தலை – பிக்போஸ் – (Bigg Boss)



ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது



“ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” என்பது மறக்கமுடியாத மிகவும் பிரபலமான ஒரு வசனம் என்பது நாம் அறிந்த ஒன்று. இது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் உலக நாயகன் என அனைவராலும் அழைக்கப்படும் பிரபல தென்னிந்திய நடிகர் கமலஹாசன் அவர்களால் உச்சரிக்கப்பட்ட மிகப்பிரபல்யமான வாசகம். இந்த வாசகம் தமிழ் நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பெரும் தலை - பிக்போஸ் (Bigg Boss) உண்மை காட்சி (Reality Show) என்ற நிகழ்ச்சியின் மூலமே பிரபல்யமானது.

கடந்த 2017இல் முதல் தடவையாக தமிழில் விஜய் தொலைகாட்சி நிறுவனத்தால் 1வது பருவம் ஆரம்பிக்கப்பட்டு நடிகர் கமலகாசன் அவர்கள் தொகுத்து வழங்க மிக வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டிரு;தது. இது பலராலும் வரவேற்கப்பட்டதோடு மிகவும் ஆவலுடன் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இடம்பெற்றது. அதே போல் இந்நிகழ்சியின் இரண்டாவது பருவம் 2018இல் நடிகர் கமலகாசன் அவர்கள் தொகுத்து வழங்க நடாத்தி முடிக்கப்பட்டது. முதலாவது பருவத்தைப்போல் இரண்டாவது பருவம் அவ்வளவு சிறப்பாக சோபிக்கவில்லையாயினும் 100 நாட்கள் சிறப்பாக நடந்தது என்றுதான் கூறவேண்டும்.